பைக் இல்லை... மோட்டார் இல்லை... ஆனாலும் ₹19,000 விலை! குழந்தைகளுக்காக Tesla அறிமுகப்படுத்திய புதிய வாகனம் வைரல்

Image
Tesla நிறுவனம் 2 முதல் 5 வயது குழந்தைகளுக்காக புதிய Balance Bike ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. வழக்கமான Balance Bike-களைப் போலவே இதில் பெடல்கள், மோட்டார் அல்லது பிரேக் எதுவும் இல்லை. குழந்தைகள் தங்கள் கால்களை பயன்படுத்தியே இதை இயக்க வேண்டும். இந்த புதிய மாடலின் முக்கிய சிறப்பு அதன் எடை குறைந்த Magnesium Frame மற்றும் எளிமையான நவீன வடிவமைப்பாகும். மேலும் குழந்தையின் உயரத்திற்கு ஏற்ப ஐந்து நிலைகளில் இருக்கையை மாற்றிக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த விஷயம் அதன் விலையே. அமெரிக்காவில் இந்த Balance Bike-ன் விலை 225 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹19,000 ஆகும். பொதுவாக இதே வகை Balance Bike-கள் 100 டாலர் அளவிலேயே விற்கப்படும் நிலையில், Tesla இரு மடங்குக்கும் அதிக விலையை நிர்ணயித்துள்ளது. விலை அதிகமாக இருந்தாலும், Tesla அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே முழு இருப்பும் விற்றுத் தீர்ந்துவிட்டது. இதனுடன் விற்பனைக்கு வந்த 30 டாலர் மதிப்புள்ள Tesla டி-ஷர்ட்டும் முழுவதுமாக விற்றுத் தீர்ந்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் எத்த...

Redmi Note 17 சீரீஸ் – பிரம்மாண்ட பேட்டரியுடன் வருகிறதா? வெளியீட்டுக்கு முன்பே கசிந்த தகவல்கள்!

வழக்கமாக Redmi Note 16 சீரிஸை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வரிசையையே தவிர்த்து நேரடியாக Redmi Note 17 சீரிஸை வெளியிட Redmi திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாத இறுதிக்குள் அறிமுகமாகும் என கூறப்படும் இந்த சீரிஸில் Redmi Note 17, Note 17 Pro, Note 17 Pro Max மற்றும் Note 17R என மொத்தம் நான்கு மாடல்கள் இடம்பெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.கசிந்த விவரங்களின்படி, Redmi Note 17 மாடலில் 6.83 இன்ச் அளவிலான 1.5K பிளாட் டிஸ்ப்ளே வழங்கப்படலாம். ஆனால் இதில் எந்த ப்ராசஸர் பயன்படுத்தப்படுகிறது என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. சில தகவல்கள் Snapdragon 6 Gen 5 என கூற, மற்ற சில தகவல்கள் Snapdragon 6s Gen 4 சிப்செட் இடம்பெறும் என தெரிவிக்கின்றன. மேலும், 9,000mAh திறன் கொண்ட மிகப்பெரிய பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50MP கேமரா கிடைக்கலாம் என கூறப்படுகிறது.Redmi Note 17 Pro மாடலைப் பற்றியும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்ப தகவல்களில் Dimensity 7500 சிப்செட் இடம்பெறும் என கூறப்பட்ட நிலையில், புதிய தகவல்கள் Snapdragon 6 Gen 5 சிப்செட்டே இதில் பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கின்றன. இதிலும் 9,000mAh பேட்டரி மற்றும் 50MP கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.அதே நேரத்தில், இந்த சீரிஸின் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக Redmi Note 17 Pro Max இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் Dimensity 7500 ப்ராசஸர், 200MP கேமரா மற்றும் 10,100mAh திறன் கொண்ட பிரம்மாண்ட பேட்டரி இடம்பெறலாம். அதோடு 1.5K OLED டிஸ்ப்ளேவும் வழங்கப்படலாம். ஆனால் டிஸ்ப்ளே அளவு மற்ற மாடல்களைப் போலவே 6.83 இன்ச் ஆக இருக்குமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் HyperOS 3.1 அடிப்படையிலான Android 16 இயங்குதளத்துடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற அம்சங்களும் இடம்பெறலாம். Redmi Note 17R மாடலின் விவரங்கள் மட்டும் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு வெளியான Redmi Note 15 சீரிஸில் Pro Max மாடல் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக Pro+ மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. Note 15, Note 15 Pro மற்றும் Note 15 Pro+ மாடல்களில் முறையே Snapdragon 6 Gen 3, Dimensity 7400 Ultra மற்றும் Snapdragon 7s Gen 4 சிப்செட்கள் பயன்படுத்தப்பட்டன. Pro மற்றும் Pro+ மாடல்களில் 200MP கேமரா வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கசிந்துள்ள Note 17 சீரிஸ் தகவல்களில் இடம்பெறும் 9,000mAh மற்றும் 10,100mAh பேட்டரி திறன்கள், Redmi வரலாற்றிலேயே மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கக்கூடும் என தொழில்நுட்ப உலகம் எதிர்பார்த்து வருகிறது.

Comments

Popular posts from this blog

100 கி.மீக்கும் அதிக எலக்ட்ரிக் ரேஞ்ச்! இந்தியா வருகிறது Mercedes-AMG E 53 HYBRID 4MATIC+

520 கி.மீ ரேஞ்சுடன் வருகிறதா Kia Syros EV? அறிமுகத்திற்கு முன்பே முன்பதிவு தொடக்கம்!

187 கி.மீ ரேஞ்சுடன் Hero Vida VX2 Plus அறிமுகம்! பெரிய பேட்டரியால் அதிக தூரம் பயணிக்கும் புதிய ஸ்கூட்டர்